உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

செத்த மீன்களால் ​ நாற்றம் அடிக்கும் கடலூர் கடற்கரை

கடலூர்:

          தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால்,​​ கடலில் செத்து கரை ஒதுங்கிய மீன்களால் கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் நாற்றமடிக்கத் தொடங்கி உள்ளது.கடலூரை அடுத்த நொச்சிக்குப்பம் முதல் ரெட்டியார்பேட்டை வரை உள்ள மீனவர் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர்,​​ மீன்வளத் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.​ செத்த மீன்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.​ நொச்சிக்காடு கிராமத்தில் அந்த மீன்களை ஊர்மக்களே பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.​ மற்ற கிராமங்களில் செத்த மீன்கள் அகற்றப்படாமல்,​​ அழுகி துர்நாற்றம் அடித்துக் கொண்டு இருப்பதாகவும்,​​ கடற்கரை கிராமங்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும்,​​ உடனே அவற்றை அகற்ற வேண்டும் என்றும்,​​ மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். தொற்றுநோய் பரவுமுன்,​​ செத்துக் கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சிங்காரவேலனார் முன்னேற்றக் கழக கடலூர் மாவட்டத் தலைவர் சுபாஷ் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior