கடலூர் :
பிளஸ் 2 செய்முறைத் தேர்வை கண்காணிக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக செய்முறைத் தேர்வுகள் இம்மாதம் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் நடந்தது. தொடர்ந்து நேற்று (8ம்தேதி) முதல் அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க ஒரு தலைமையாசிரியர் தலைமையில் 3 முதுகலை ஆசிரியர்கள் கொண்ட இரண்டு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாவட்டம் முழுதும் அதிரடி சோதனை மேற் கொண்டு முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தேர்வு அறையிலிருந்து மாணவ, மாணவிகள் வெளியேற்றப்படுவதுடன் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித் துறை எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக