உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

ஊராட்சி அலுவலகங்களுக்கு தலைவர்கள் வருவதில்லை! மாட்டுத் தொழுவமாக மாறும் அவலம்

கடலூர் : 

               ஊராட்சி தலைவர்களின் "ஈகோ' பிரச்னையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் பயன்பாடின்றி பூட்டிய நிலையில் பாழடைந்து, காட்சி பொருளாக உள்ளது.

             உள்ளூர் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக தேர் தல் நடத்தி கிராம பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் ஓரிடத் தில் கூடி கிராம பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், கிராம அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வசதியாக கிராமங்கள் தோறும் அரசு ஊராட்சி அலுவலகங்களை கட்டிக் கொடுத்துள்ளது. அவ்வாறு கடலூர் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளும், அண்ணாகிராமம் 42, பண்ருட்டி 42, குறிஞ்சிப் பாடி 49, காட்டுமன்னார் கோவில் 55, குமராட்சி 57, கீரப்பாளையம் 63, புவனகிரி 47, பரங்கிப்பேட்டை 41, விருத்தாசலம் 51, நல் லூர் 64, கம்மாபுரம் 53, மங்களூரில் 66 ஊராட்சிகள் என மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன.
            ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் நிதி மூலம் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களிடம் குறைகளை கேட்பது, மனுக்களை பெறுவது, திருமண உதவித் தொகை, முதியோர், விதவை உதவித் தொகை பெற சான்றுகளில் கையெழுத்திடுவது, வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீதுகளில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்காக ஊராட்சித் தலைவர்கள் அலுவலகங்களுக்கு அவசியம் வரவேண்டும். ஆனால் ஊராட்சித் தலைவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில்லை. பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் திறக்காமல் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. சில அலுவலகங்கள் பராமரிப்பின்றி இரவு நேரத்தில் ஆடு, மாடுகளின் தொழுவமாகவும், சூதாட்ட விடுதிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவர் ஒரு ஊரிலும், அலுவலகம் பக்கத்து ஊரிலும் இருந்தால் அதனை கவுரவ குறைச்சலாக நினைத்து அவர்கள் அலு வலகங்களுக்கு செல்வதில்லை. ஒரு சில தலைவர்கள் நகர் புறங்களில் குடியேறிவிட்டதால் அவர் கள் ஊராட்சிகளின் பக்கமே செல்வதில்லை. சில ஊராட்சிகளில் எழுத் தர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு எப்பொழுதாவது சென்று வருகின்றனர். தலைவரை அவரது வீட் டிற்கு சென்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

              அதே போல் ஊராட்சி அலுவலகங்களில் மாதம் தோறும் சாதாரணக் கூட்டம் மற்றும் அரசு அறிவிக்கும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண் டும். ஆனால் இந்த கூட் டங்கள் பெரும்பாலும் ஊராட்சி தலைவர்களின் வீடுகளிலேயே நடத்தப்படுகிறது. சில ஊராட்சிகளில் கூட்டம் நடத்தாமலே பதிவேடுகளில் கையெழுத்து வாங்கி கூட்டம் நடத்தியதாக அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர்கள் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கிராம பிரச்னைகளை கூடி பேசி தீர்வு காணவே அரசு ஊராட்சி அலுவலகங்களை கட்டித் தருகிறது. ஆனால் அங்கு சென்று பணிபுரிவதை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கவுரவ குறைச்சலாக கருதி தங்கள் வீட்டையே ஊராட்சி அலுவலகமாக செயல்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு கட்டிக் கொடுத்த ஊராட்சி அலுவலகங்கள் பல பயன்பாடின்றி பூட்டி பாழடைந்து வருகிறது. இதனைத் தவிர்த்திட ஊராட்சி அலுவலகங்கள் தினசரி குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல் லையெனில் வீணாகி வரும் ஊராட்சி அலுவலகங்களை அப்பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்காவது ஒதுக்கீடு செய்தால் கட்டடம் வீணாவதை தடுக்கலாம்.
மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்களும் வீணாகிறது: 

                  மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளி லும் அரசு நிதி மூலம் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. இந்த கட்டடங்களும், ஊராட்சி அலுவலகம் போன்றே பூட்டியே கிடக்கிறது. இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் வாராந்திர கூட்டங்கள் நடத்துவதில்லை. மகளிருக்கென மாவட்டம் முழுவதும் கட்டபட்ட இந்த அலுவலகங்களுக்காக அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் பணம் வீணானது தான் மிச்சம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior