உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

இந்திய கம்யூ., பஞ்சர் ஒட்டும் போராட்டம் : அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திட்டக்குடி : 

                    திட்டக்குடியில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பஞ்சர் ஒட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திட்டக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்காததைக் கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாலை பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்தப் பட இருந்தது. 

                     அதனைத் தொடர்ந்து நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி, நெடுஞ் சாலைத்துறை இளநிலை உதவியாளர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு சுப்ரமணியன், வட்ட செயலாளர்கள் மகாலிங்கம், சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தொழுதூர்- கருவேப்பிலங்குறிச்சி நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்கு 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இறையூர்- கண்டப்பங்குறிச்சி சாலையில் நடைபெற்று வரும் பேட்ஜ் ஒர்க், 20 லட்சம் மதிப்பில் தொளார் கைகாட்டி- வேப்பூர் சாலை, திட்டக்குடி - ஆவட்டி, தொழுதூர் - பனையாந்தூர், ஆவினங்குடி - நாவலூர், கொட்டாரம்- செங்கமேடுகுடிக்காடு, ஆவட்டி - சிறுபாக்கம் உள்ளிட்ட சாலைகளை விரைவில் சீரமைக் கப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனையேற்று இந்திய கம்யூ.,வினர் போராட் டத்தை கைவிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior