நடுவீரப்பட்டு :
பதவி நீக்கம் செய்யப் பட்டவர் மீண்டும் ஊராட்சி தலைவராக தொடர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியின் தலைவராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். இவர் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய் ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்து கலெக் டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.இதனை ரத்து செய் யக்கோரி ஆறுமுகம் சீராய்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி முதன்மை செயலர் அஷாக் வர்தன் ஷெட்டி ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பதவி நீக்கம் செய்ததில் தெளிவான காரணத்தை குறிப்பிட்டு பதவி நீக்கம் செய்யவில்லை. அதனால் நடுவீரப்பட்டு ஊராட்சி தலைவராக ஆறுமுகம் தொடர்ந்து செயல்பட உத் திரவு பிறப்பித்தார். அதன் பேரில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் நடுவீரப் பட்டு ஊராட்சி தலைவராக ஆறுமுகம் செயல் பட உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக