கடலூர் :
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஒதுக் கப்பட்ட நிதியை ரயில்வே மேம்பாலத்திற்கு செலவிடப்பட்டதால் சுரங் கப்பாதை அமைக்கும் பணி தடைபட்டு வந்தது. தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைப்பணி முடிவடைந்து ஒரு சில மாதங்களில் ரயில் விடப்படவுள்ளது. இதனால் முன்பு இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை மார்க்கத்தில் வரவுள்ளது. அதனால் ரயில்வே கேட் அடிக்கடி திறந்து மூட வேண்டிய நிலை உள்ளதால் லாரன்ஸ் ரோட்டில் நிரந்தரமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே லாரன்ஸ் ரோட்டில் உடனடியாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு நலச்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின.
தற்போது இந்த சுரங்கப்பாதை பணிக்காக அரசு 5.6 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதனால் சுரங்கப் பாதை அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரயில்வே துறை மூலம் செய்யப்படும் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்வே துறையும் பாலம் கட்டுமானப்பணி வரைபடத்தை தென்னக ரயில்வே தலைமை பொறியாளருக்கு (பாலங்கள் மற்றும் வரைபடம்) அனுப்பி வைத்துள்ளது. ரயில்வே பணி முடிந்தவுடன் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்படவுள்ளது. லாரன்ஸ் ரோட்டில் ராட்சத குடிநீர் குழாய்கள், கேபிள்கள் செல்வதால் அதை அகற்றி மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக