சிறுபாக்கம் :
ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல்பட்டால் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் முதன்மையாக இருக்கும் என எம்.பி., அழகிரி பேசினார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக் கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஐவதுகுடியில் நடந்தது. விழாவிற்கு சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை யேற்று ஜே.ஆர்.சி., நிறுவனர் படத்தை திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர்கள் ஐவதுகுடி கோவிந்தராசு, நகர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் குருநாதன் வரவேற்றார்.
ஜே.ஆர்.சி., கொடியை ஏற்றி வைத்த எம்.பி, அழகிரி பேசியதாவது:
இந்தியாவில் கேபினட் செயலர் முதல் மாநில அமைச்சர்கள், பல்வேறு துறைகள் இருந்த போதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாட வேண்டி இருப்பது வருத்தப்பட வேண்டிய செயலாக உள்ளது. இதற்கு ஜே.ஆர்.சி., சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவிகளை பயன்படுத்தி அரசே போலியோ சொட்டு மருந்து வழங்க அனுமதிக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு கூட் டத்தில் பேசும் போது இந் தியாவும், சீனாவும் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் இரு நாடுகளிலும் கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக வளர்ச்சி அடைந்து நாட் டின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவை காட்டிலும் சீனா 2.5 மடங்கு விவசாயத்தில் வளர்ச்சியடைந்து ஆசியா முழுக்க உணவு பொருட்களை வழங்கிட தயாராக உள்ளது. இதற்கு சீனாவில் 24 மணி நேரமும் விவசாயம், கல்வி, சமுதாய கட்டமைப்பை வலியுறுத்தி வருவதோடு, ஒற்றை ஆட்சி முறை அமல்படுத்தி வருவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறை இருப்பதால் தன்னிச்சையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. எந்த பகுதியில் இருந்து நாட்டை வளமான பாதைக்கு கொண்டு வருவது என்பதை உணர தாமதம் ஏற்பட்டு வருகிறது.
என்னை பொறுத்தவரையில் பள்ளிகளில் கல்வி உட்பட ஒரே சமுதாயம், நாட்டின் வளர்ச்சிக்கான வழி உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல் பட்டால் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் முதன்மையாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகமாக இருப்பது உள் நாட் டில் பல மொழி, கலாசாரங்களே. இதனை மாற்றிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சீனாவிற்கு அனுப்பி அங்குள்ள கல்வி முறை, சமூக கட்டமைப்பு உள்ளிட்டவைகளை பார் வையிட்டு வர கோரிக்கை வைத்துள்ளேன். இது நடைமுறை படுத்தினால் இந்தியா மேலும் வளர்ச்சியடைந்து உலக நாடுகளே திரும்பி பார்க்கும் நிலை ஏற்படும் என பேசினார். ஜே.ஆர்.சி., மாவட்ட இணை அமைப்பாளர் அருள்தாஸ் நன்றி கூறி னார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக