உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

கடலூரில் நாளை ஆர்ப்பாட்டம்: ஐக்கிய ஜனதாதளம் முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                   விலைவாசி உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் நாளை (10ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த ஐக்கிய ஜனதாதளம் முடிவு செய் துள்ளது. ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயற்குழு கூட்டம் சேத்தியாத் தோப்பில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி, நகர தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.மாநில துணை தலைவர் ஜெங்கால், பொதுச் செயலாளர் எழிலோவியன், செயலாளர் இப்ராம் பால், ஊனமுற்றோர் பிரிவு தலைவர் காமராஜ், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சின்னையன் உள்ளிட்டோர் பேசினர்.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தேசிய தலைமையின் முடிவை ஏற்றும் நாளை (10ம் தேதி) கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாவட்டத்தில் பரவி வரும் விஷகாய்ச்சல் நோயை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு-விருத்தாசலம் சாலையை சீரமைக்க வேண்டும். சேலம், சென்னை செல்லும் அரசு பஸ்களை சேத்தியாத்தோப்பு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நகர செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior