சிறுபாக்கம் :
மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:
மங்களூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டம் நடப் பாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு உற்பத்தியை அதிகரிக்க விதை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், பயறு வகை விதைகள் வாங்கும் விவசாயிகளுக்கு குவிண்டால் விதைக்கு 2 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட், டி.ஏ.பி., உரம், கைதெளிப்பான், தானிய குதிர்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக