காட்டுமன்னார்கோவில் :
கோவில்களில் விஸ்வகர்ம சமுதாயத்தினர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு, மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் துரைக் கண்ணு, சுந்தரரேசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கண்ணையன் வரவேற்றார். நிறுவன தலைவர் சுப்பையன், மாநில தலைவர் சண்முகநாதன் பேசினர். எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி சேர்மன் கதிரவன் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் அப்பாவு, பேரவை தலைவர் வடிவேல், பொதுச் செயலாளர் மாதவராஜ், தனுஷ்கோடி, செல்வராஜ், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கைவினைத் தொழிலாளர் மற்றும் பொற்கொல்லர் நல வாரிய தலைவர், கோவில்களில் அறங்காவலர் மற்றும் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிகளின் விஸ்வகர்ம சமூகத்தினரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக