பண்ருட்டி:
வாய்க்கால் தூர்வாரும் பணியில் கூலியை உயர்த்தித் தரக்கோரி கிராம மக்கள் கடலூர்-விழுப்புரம் சாலை மாளிகைமேட்டில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு கிராமத்தில் சித்தேரி கால்வாய் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் இக்கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 100-ம் மேற்பட்ட பெண்கள் கூலியை உயர்த்தித் தரக்கோரி கடலூர்-விழுப்புரம் சாலை மாளிகைமேட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டாட்சியர் ஆர்.பாபு, இன்ஸ்பெக்டர் செல்வம், அண்ணாகிராமம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், தமிழரசி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்து, பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் கடலூர்-விழுப்புரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக