கடலூர் :
கடலூர் ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் "மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல ஒரே பாதையை பயன் டுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கம் செல்லும் பஸ் கள் செல்வதற்காக ரயில்வே மேம்பாலத்தையொட்டி இணைப்பு சாலை அமைக்கப் பட்டுள் ளது. இதனால் சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் மேம்பாலத்தின் வலதுபுற சாலை வழியாகவும், பஸ் நிலையத்திலிருந்த வரும் வாகனங்கள் இடது புற சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத் தில் இடதுபுற சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள், மேம்பாலத்தில் வலதுபுற சாலை வழியாகவே செல்கின்றன. இந்த சாலை குறுகிய பகுதி என்பதால் ஒரே வழியில் வாகனங்கள் வந்து, செல்லும்போது நெரிசல் காரணமாக தொடர் விபத் துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் மேம்பாலத்திலில் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக பாலத்தின் இறக் கத்தையொட்டிய வலது புற சாலையில் திரும்பும் போது திடீரென எதிரில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் உள்ள மெகா பள்ளத்தை மூடி சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக