உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

சூப்பர்...108: மாவட்டத்தில் 23,717 பேர் பயனடைந்தனர்: ஆம்புலன்சில் பிறந்தது 123 குழந்தைகள்

கடலூர்: 

                 மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கி, இதுவரை 23,717 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்சில் மட்டும் 123 குழந்தைகள் சுகப்பிரசவத்தினால் பிறந்துள் ளன. கிராமங்களில் உள் ளவர்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

              அவசர மருத்துவ உதவிகளுக்காக தமிழகத்தில் 2008ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப் பட்டது. இச்சேவை கடலூர் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வேப்பூர், புதுச்சத்திரம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட 10 இடங்களில் துவங்கப் பட்டது. இத்திட்டம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுடையதாக இருந்ததால் கடந்தாண்டு மார்ச் மாதம் நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடியிலும், டிசம்பரில் காடாம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலியிலும் துவக்கப்பட்டு, தற்போது மாவட்டத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் அழைப்பு வந்த 10 நிமிடங்களில் சம்பவ இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 15 கி.மீ., தூரத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. சேவை துவங்கிய ஆறுமாதத்திற்கு குறைவான அழைப்புகள் இருந் தாலும் தற்போது சராசரியாக மாதத்திற்கு 2,500 முதல் 3,000 அழைப்புகள் வருகின்றன.

                     அதிகபட்சமாக கடந்த ஜனவரியில் வந்த 3,000 அழைப்புகளில் 2,641 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ற பிப்ரவரியில் 2143 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இச் சேவை துவங்கி, இதுவரை 23,717 அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் வேன்கள் நேரில் சென்று நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீவிபத்துக்களில் பாதித்த சிலர் மட்டுமே இறந்துள்ளனர். இதில் பிரசவத்திற்காக 6,236 பேரும், சாலை விபத் துக்களில் 4005 பேரும், இருதய பாதிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட நோயினால் பாதித்த 9,250 பேரும், தகராறு, அடிதடியில் காயமடைந்த 858 பேரும், தீவிபத்தில் பாதித்த 360 பேரும், விஷம் குடித்த 862 பேரும், பாம்பு கடித்ததில் 512 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வேனில் மட்டும் 123 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந் துள்ளன. அதில் வேப்பூரில் ஒரு பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதில் நகர் புறங்களில் இருந்து வரும் அழைப்புகளில் 10 முதல் 15 சதவீதத்தினர் அவசரத்திற்காக வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிராமங்களில் வசிப்பவர்கள் இதனால் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சுவலி, பாம்பு கடி, விஷம் குடித்தவர்கள், தீவிபத்தில் பாதித் தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிராம மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அவசரத்திற்கு மட்டும் 108ஐ அழையுங்கள்! 

                       முற்றிலும் பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்டது இத்திட்டம். ஆனால் சிலர் அவசர தேவைகளுக்காக மட்டும் அழைக்காமல், வயிற்று வலி, உடல் வலி உள்ளிட்ட சாதாரண தேவைகளுக்கும் அழைக்கின்றனர். இவர்கள் ஆட்டோ அல்லது இதர வாகனங்களில் கூட மருத்துவமனைக்குச் செல்லலாம். இது போன்ற அழைப்புகளால் விபத்து மற்றும் பாம்பு காடி, விஷம் குடித்து உயிருக்கு ஆபாத்தான நிலையில் உள்ளவர்களின் அழைப்புகளுக்கு செல்ல தாமதமாகிறது. இதனை உணர்ந்து பொது மக்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் 108ஐ அழைத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மேலும் சிலரை காப்பாற்றலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior