உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

கடலூர் டிஆர்ஓ எனக் கூறி ஏமாற்ற முயன்ற இளைஞர் கைது

கும்பகோணம்:

                            கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி தொலைபேசியில் பேசி ஏமாற்ற முயன்ற இளைஞரை  போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
                  
                     கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் கச்சாக்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துக்குமரன் (35). கேட்டரிங் படிப்பு முடித்துள்ள இவர், லண்டனில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் லண்டனிலிருந்து திரும்பிய இவருக்கு திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடந்தை கோட்டாட்சியர் கோ. செங்குட்டுவன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி நபர் தன்னை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் என்று கூறி, தனது உறவினர் முத்துக்குமரனுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினாராம்.  இதேபோல, திருவிடைமருதூர் வட்டாட்சியரிடமும், கடலூர் மாவட்ட டி.ஆர்.ஓ. பேசுவதாகக் கூறி, தனது உறவினர் முத்துக்குமரனுக்கு மணல் எடுக்க உரிமம் வழங்க அனுமதியளிக்குமாறு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் தெரிவித்தாராம்.  இந்நிலையிலó, கடந்த 19-ம் தேதி இரவு கும்பகோணம் ஆர்.டி.ஓ. செங்குட்டுவனிடம்  தொலைபேசியில் பேசிய அந்த நபர் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தினாராம். இதையடுத்து, திங்கள்கிழமை தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு முத்துக்குமரனிடம் கூறுமாறு, ஆர்.டி.ஓ. செங்குட்டுவன் அந்த நபரிடம் தெரிவித்தாராம். இந்நிலையில், ஆர்.டி.ஓ. செங்குட்டுவன் திங்கள்கிழமை காலை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனை தொடர்பு கொண்டு இதுகுறித்து  கேட்டபோது, தான் அப்படி யாருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்று அவர் கூறினார். இதையடுத்து, ஆர்.டி.ஓ. செங்குட்டுவன், குடந்தை காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் புகார் தெரிவித்தார்.  இதற்கிடையே, டி.எஸ்.பி. மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸôர் திங்கள்கிழமை குடந்தை ஆ.டி.ஓ. அலுவலகத்தில் காத்திருந்தனர். 
 
                       அப்போது அங்கு வந்த முத்துக்குமரனிடம் ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி தொலைபேசியில் பேசியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீஸôர் அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior