உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

கோஷ்டி மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு: 39 பேர் கைது: 5 பேருக்கு வலை

கடலூர்:

                  கடலூர் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடுகளுக்கு தீ வைத்த 39 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் நாராயணசாமிக்கும் நாயக்கநத்தம் காலனியைச் சேர்ந்த முருகன், விஜயகாந்த், பாலகிருஷ்ணன் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நாயக்கநத்தம் காலனிக்குள் புகுந்து தாக்கி வீடுகள் மற்றும் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். இதில் 8 வீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்தை டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் பார்வையிட்டு வீடுகளுக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நாயக்கநத்தம் காலனியைசேர்ந்த ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வழிசோதனைபாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன் (57), மதனகோபால் (23), சந்தோஷ்குமார் (35), ஆனந்தன் (35) உட்பட 39 பேரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-2ல் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், 39 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior