கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த 34 இறால் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் நேற்று உரிமம் வழங்கினார். கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி உவர்நீர் இறால் பண்ணைகள் நடத்துபவர்கள் கண்டிப்பாக கடலோர உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத இறால் பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என அரசு அறிவித்திருந்தது. அதற்கேற்ப சிதம்பரம் வட்டத்தில் உவர் நீர் இறால் பண்ணை வைத்துள்ள 34 குறு இறால் பண்ணை (2 எக்டேர் நீர்ப்பரப்பிற்கு குறைவாக உள்ளது) விவசாயிகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் செய்ததில் பல்வேறு துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதனடிப்படையில் கலெக்டரின் பரிந்துரையுடன் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உரிமம் பெறப்பட்டது. நேற்று கடலூர் குறைதீர் மன்ற கூடத்தில், இறால் பண்ணை விவசாயிகளுக்கு கலெக்டர் சீத்தாராமன் உரிமம் வழங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் (நீர்வாழ் உயிரின வளர்ப்பு) இளம்பரிதி உடனிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக