உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க முடிவு: கலெக்டர்

கடலூர்:

                         உடல் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உடல் ஊனமுற்றோர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமது கல்வித்தகுதியை 2008 டிசம்பர் 31க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும், இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. பள்ளி இறுதி வகுப்பு மற்றும் அதற்கு கீழாக கல்வித்தகுதியுடைய பயனாளிகளுக்கு மாதம் 300 ரூபாயும், மேல்நிலை தகுதியுடையவருக்கு 375ம், பட்டதாரிகளுக்கு 450ம், உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஏற்கனவே பொது உதவித்தொகைத்திட்டத் தின் கீழ் பயன்பெற்றவர், பெறுபவர்களும் இப்புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உயர்த்தப்பட்ட விகிதத்தில் உதவித் தொகை பெறலாம். வேலைவாய்ப்பு அடையாள அட்டையை தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள முக்கிய சேவகர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட த்ண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior