கிள்ளை:
சிதம்பரம் அருகே குண்டுமேடு - மடுவங்கரை ரயில்வே சாலையில் கேட் அமைத்து கீப்பர் அமைக்காவிட்டால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்து ஜனவரி 5ம் தேதி சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட உள் ளது. சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் இருவழி ரயில்வே கிராசிங், தற்போது மூன்று வழி கிராசிங்காக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் குண்டுமேடு-மடுவங்கரை சந்திப்பில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் குறித்து இப்பகுதியை பார்வையிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து புஞ்சைமகத்து வாழ்க்கை, குண்டுமேடு, சின்னமடுவங்கரை வழியாக மடுவங்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி முடிந்ததும் முதல் முறையாக பஸ் இயக்கப்பட உள்ளது. சாலை விரிவாக்கப்பணிகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து இருந்தபோது இப்பகுதி சாலையை சைக்கிள் மற்றும் நடந்து கடந்து சென்ற பலர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். மேலும் கால்நடைகளும் அதிக அளவில் விபத்தில் இறந்துள்ளன. தற்போது அதிவிரைவு ரயில் இயக்கப்படும் சூழ்நிலையில் இந்த ரயில்வே கிராசிங்கில் முறையான பாதுகாப்பு குறித்தோ, கேட் அமைப்பது குறித்தோ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் கேட் அமைக்காவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே ரயில்வே துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனை தொடர்ந்து உற்சவர் ராஜ அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பழனிவேல், குமரவேல், தீனதயாளன் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக