உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

கலெக்டர் அலுவலகம் முன் மறியல் டாஸ்மாக் பணியாளர்கள் 135 பேர் கைது

கடலூர்: 

                  காலமுறை ஊதியம் வழங்க கோரி கடைகளை மூடி கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

                     பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடைகளை திறக்காமல், கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இணை செயலாளர் குணசேகரன், அமைப்பு செயலாளர் பாஸ்கரன், பிரசார செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல், துணை தலைவர் வெற்றிவேல், ஏகாம்பரம், துணை செயலாளர் குமரவேல், ராமதாஸ், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 135 பேரையும் கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior