உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

பொது வினியோகம் குறித்து மத்திய குழு ஆய்வு ரகசியமாக நடத்தி முடித்தது மாவட்ட நிர்வாகம்

கடலூர்: 

              கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் குறித்த ஆய்வு மேற் கொண்ட மத்திய புலனாய்வு குழுவினர் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்காமல் சென்றதால் குழுவின் நோக்கம் முழுமை செயல்படாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

                  இந்தியாவில் பொது வினியோக திட டத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி, முழுமையாக மக்களை சென்றடையவில்லை. ஆகையால் இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'பியுசிஎல்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறையில் உள்ள பொது வினியோக திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வாத்வா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டது. இக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொது வினியோக திட்ட செயல் முறை குறித்த ஆய்வு செய்வதோடு, அப்பகுதி மக்களை சந் தித்து கருத்து கேட்டு வருகின்றனர்.

              இவர் கள் கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாவட்டங்கள் இக்குழு வருகை குறித்து முன் கூட்டியே மாவட்ட நிர்வாகத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் ஆய்விற்கு வந்த குழுவினரை, பொதுமக்கள் சந்தித்து பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினர். ஆனால், கடலூர் மாவட்டத்தில் இக்குழு வரும் தகவல் ரகசியம் காக்கப்பட்டது. நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் துவங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்க சென்றபோது, நிருபர்களை உள்ளே விடாமல் போட்டோ கிராபர்களை மட்டும் படம் எடுக்க அனுமதித்தனர். அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்த குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சிதம்பரம் மற்றும் பண்ருட்டி பகுதிகளுக்கு சென்றனர். இத்தகவலும் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை. பொது வினியோக திட்டம் முழுமையாக பொதுமக்களை சென்றடைகிறதா என ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரை, மக்கள் சந்திக்க ஏற்பாடு செய்யாமல், குழு வருகையை மூடி மறைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior