கடலூர்:
வருவாய்த்துறையினர் மக்களின் நண்பர்களாக இருந்தால்தான் இந்த துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கடலூர் மண்டல மாநாடு டவுன்ஹாலில் நடந்தது. மாநில தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜீ, பிரசார செயலாளர் மாரிமுத்து, மாநில செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். திருமலைவாசன் வரவேற்றார்.
மாநாட்டை துவக்கி வைத்த கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:
வருவாய்த்துறையில் அடிப்படை ஊழியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மக்களின் நண்பர்களாக இருந் தால்தான் இந்த துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும்.நீங்கள் மக்களிடத்தில் அன்பும், ஆதரவும், அனுசரனையும் செலுத்தாவிட்டால் வருவாய் துறையினுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழும். எனவே நீங்கள் மக்களின் நண்பர்களாக இருங்கள். பிறருடைய துன்பத்தை உங்கள் துன்பமாக நினைத்து செயல்பட்டால் உங்களுடைய துன்பம் நிச்சயம் நீங்கும்.
நமக்கெல்லாம் அரசு ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை பணித்திருக்கிறது. அரசு ஊழியத்தில், அரசு பணியில், அரசு சேவையில் நமக்கு ஒரு அதிகார வரம்பு இருக்கிறது. நம்மால் மக்களுக்கு சேவை செய்ய முடியும். பயன்பாடு உள்ளவர்களாக செயல்பட முடியும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கையை விளக்கி பேசினார். டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், கடலூர் நகரமன்ற துணை சேர்மன் தாமரைச் செல்வன், மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் கோவிந்தராசன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக