கடலூர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று கடலூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே பெறப்படும் ஊதியத்தில் குறைவின்றி அடிப்படை ஊதியம் நிர்ணயித்து மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடலூர் நுகர்பொருள் வாணிப் கழக அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை வீரராகவன் துவக்கி வைத்துப் பேசினார். மாநில துணை செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தார். நாகராஜி வரவேற்றார். அர்ச்சுணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் மணிவேல், கடலூர் தலைவர் மாசிலாமணி, தர்மன், மாணிக்கம் பங்கேற்றனர். குழந்தைவேல் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக