உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

அனைவருக்கும் கல்வி திட்ட நிதி செலவிடுவதில் முறைகேடு : அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புகார்

               அனைவருக்கும் கல்வி திட்ட வகுப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை முறையாக செலவிடாமல் அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

                  மாவட்டத்தில் ஆயிரத்து 164 தொடக்கப் பள்ளிகளும், 259 நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. இப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் நடந்து வருகின்றன.இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ஆசிரியருக்கு வகுப்பு ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பின் போது விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு தனியாக ஒரு நாள் சிறப்பு பயிற்சி மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வளமையங்களில் நடத்தப்பட்டது.ஆசிரியருக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 நாள் என அரசு வழங்கி வரும் தற்செயல் விடுப்பில், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற் காத ஆசிரியர்களுக்கு வகுப்பு ஒன்றுக்கு ஒரு நாள் வீதம் கழிக்கின்றனர். இதனால் ஆசிரியர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.விடுப்பிலிருந்த ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பின்னர், கழிக்கப்பட்ட தற்செயல் விடுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

                 தவிர 3 முதல் 4 வகுப்புகள் வராத ஆசிரியர்களுக்கும், ஒரு நாள் மட்டுமே வராத ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் வராத நாட்களுக்கும் சேர்த்து வருகை பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் இந்நிலை நீடிக்கிறது. அனைத்து பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றதாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் வகுப்புக்கு மட்டும் 50 ரூபாய் வழங்கப் பட்டது. ஏழை மாணவர்களுக்கு கல்வி போதித்திட அரசு வழங்கி வரும் நிதியை, அதிகாரிகள் இதுபோன்று பல்வேறு வகையில் சுரண்டி வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த முறைகேடு குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட மாநில அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior