நெய்வேலி:
நெய்வேலியில் டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாநில பொருளாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தவநாதன் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். விற்பனை தொகையை அருகாமையில் உள்ள வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊக்கத்தொகை 1.5 சதவீதம் வழங்க வேண்டும். சரக்கு இறக்கும் கூலியை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும். இரவு விற்பனையின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகளுக்கு கிரில் கேட் அமைத்து கவுண்டரில் விற்பனை செய்ய ஆணையிட வேண்டும். விற்பனை ரசீது வழங்க கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவிந்தசாமி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக