உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நடராஜர் கோவிலில் சசிகலா பூஜை

 சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரிகார பூஜை செய்து வழிபட்டார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த சில நாட்களாக நாகை, தஞ்சை மாவட்ட கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சித்சபையில் ஏறி நடராஜரை வழிபட்டார். நடராஜர் கோவில் வளாகத்திலேயே உள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னிதி, சரபேஸ்வரர், ஆதிமூலநாதர், சிவகாமியம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். அங்கு சசிகலா பெயரில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. 21 பேருக்கு எலுமிச்சை, புளியோதரை சாதங் களும், தேங்காய், வாழைப் பழம் அடங்கிய பிரசாதங்களும் வழங்கினார். கோவிலில் பூஜைகள் செய்த தீட்சிதர்களுக்கு 1,000, 500 ரூபாய் என நோட்டுகளை வாரி வழங்கினார். 2 மணி நேரம் நடராஜர் கோவிலில் இருந்த சசிகலா, பகல் 12 மணிக்கு தில்லை காளி கோவிலுக்கு வந்தார். அங்கு சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சசிகலா பெயரில் சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனையும் நடந்தது. தில்லையம்மனுக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்ட்டு சென்னை சென்றார். பிரதோஷ தினமான நேற்று நடராஜரை வணங்கினால் சிறப்பு என்பதால் கோவிலுக்கு வந்தார் என்றும், ரேவதி நட்சத்திரமான சசிகலாவிற்கும், மகம் நட்சத்திரமான ஜெயலலிதாவிற்கும் தற்போது ஆகாது என்பதால் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior