உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு: இமாச்சல பிரதேச ஊரக வளர்ச்சி குழு ஆய்வு


பண்ருட்டி : 

                   பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் முழு சுகாதார திட்டம், மகளிர் குழுக்கள் செயல்பாடு குறித்து இமாச்சல பிரதேச ஊரக வளர்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

                   இமாச்சல பிரதேசம் சிர்பூம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உதவி இயக்குனர் சவுகான் தலைமையில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர்கள், கல்வித் துறை ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேர் தமிழகம், கேரளா பகுதியில் முழுசுகாதார திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சிக்கு வந்தனர். இக்குழுவினருக்கு ஊராட்சி தலைவர் அமுதா தலைமையில் அண்ணாகிராம ஒன்றிய பி.டி.ஓ.க்கள் தமிழரசி, சுப்ரமணியன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பா ளர் வேலுமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் குமார், மகளிர் கூட்டமைப்பு செயலாளர் சரஸ்வதி, சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி ஆகியோர் வரவேற்றனர்.

                  கிராமத்தில் தனி நபர் கழிவறை, அங்கன்வாடி கழிவறை, பள்ளி கழிவறை, சுற்றுசுழல் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பேக்கரி கேக் வகைகள், பிளீச்சிங் பவுடர், சோப் வகைகள், மண் புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றை பார்வையிட்டனர். 

முழுசுகாதார திட்டபணிகளை பார்வையிட்ட இமாச்சலபிரதேச ஊரகவளர்ச்சி குழு தலைவர் சவுகான்  கூறுகையில், '

               தமிழகம்,கேரளாவில் முழு சுகாதார திட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். சிர்பூம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்கள், 228 ஊராட்சிகள், 38 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை எங்கள் மாவட்டத்தில் செயல்படுத்த கள ஆய்வு செய்கிறோம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior