உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நெய்வேலியில் கந்து வட்டிக்காரர்கள் அட்டூழியம்: தற்கொலை முடிவை தேடும் தொழிலாளர்கள்


நெய்வேலி : 

                  நெய்வேலியில் கந்துவட்டிக்கு கொடுத்த பணத்தை மனிதநேயமின்றி வசூல் செய்யும் கும்பலால், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் தற்கொலை முடிவை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

                பணப்புழக்கம் அதிகமுள்ள நெய்வேலி நகரில், கந்து வட்டி கொடுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வட்டிக்கு கடனை வாங்கி விட்டு, வட்டி கட்ட முடியாமல் வட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டும், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இப்படி அடாவடியாக பணத்தை தொழிலாளர்களிடையே வசூல் செய்வது தனி நபர் கந்து வட்டிக் காரர்கள் மட்டுமின்றி, சில தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த கும்பலும் ஈடுபடுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கந்து வட்டிக்காரர்கள் கடன் கொடுக்கும் போது, என்.எல்.சி., பணியாளரின் ரேஷன் கார்டு, ஏ.டி.எம்., கார்டு, வங்கி புத்தகம் மட்டுமின்றி வெற்று பத்திரங்களில் கையெழுத்து என பல ஆதாரங்களையும் பெறுகின்றனர். பணத்தை வாங்கிய அப்பாவிகள், வட்டி கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். அந்த வட்டியை அசலுடன் சேர்த்து அடாவடியாக வசூல் செய்வதால், அப்பாவிகள் தற்கொலை முடிவுக்கும் சென் றுள்ளனர். இதற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்தாலும், அந்த கும்பலின் அட்டூழியம் குறையவில்லை.

                      ஒரு சில தனியார் நிதி நிறுவனங்களில், கடன் வாங்கிய என்.எல்.சி., பணியாளருக்கு ஜாமீன் போட்டவர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்கள் பணம் கட்டவில்லையென்றால், ஜாமீன் போட்ட என்.எல்.சி., பணியாளர் களின் சம்பளத்தில் சட்ட ரீதியாக கடன் தொகையை தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்து கொள் கின்றனர்.கடன் வாங்கியவர்கள், ஜாமீன் போட்டவர்கள் என இரு தரப்பிலும் சம்பளம் வாங்க முடியாமல் அவதிப்படும், பரிதாப நிலையும் அதிகரித்து வருகிறது. மேலும் நிதி நிறுவனத்தினர் என்.எல்.சி., மூலம் பணத்தை வசூல் செய்து கொள்கின்றனர். இனியும் என்.எல்.சி., நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுக்கு பணம் வசூலித்து தரும் வேலையை செய்யாமல் இருக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பாவி தொழிலாளர்கள் புலம்புகின்றனர். கந்து வட்டியில் ஈடுபடும் கும் பல் மட்டுமின்றி அராஜக வட்டி வசூலிக்கும் ஒரு சில தனியார் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு அப்பாவி தொழிலாளர் களை காப்பாற்ற வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior