உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நிலுவைத் தொகையை அரசின் சிறப்பு நிதியில் வழங்க வலியுறுத்தல்

 கடலூர் : 

                   ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு சிறப்பு நிதி மூலம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என ஊராட்சிமன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

கடலூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், 

                     'கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளின் அனைத்து மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து சம்பள நிலுவைத் தொகை இன்று வரை உள்ளன. அரசு ஆணைப்படி ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் வரை நிலுவைத் தொகை வழங்கவேண்டியுள்ளன. ஊராட்சி நிதியிலிருந்து 'டேங்க்' ஆபரேட்டர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வாய்ப்பு இல்லை.  ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போன்ற பராமரிப்புகளுக்கே போதுமானதாக உள்ளன. அரசு மூலம் சிறப்புத் தொகை 'டேங்க்' ஆபரேட்டர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும். மேலும் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தில் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு வீடு கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior