உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

'நாசா' மையத்தில் பயிற்சி: மாணவர்கள் உற்சாகம்

               அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப் பார்த்து பயிற்சி பெறச் செல்லும், பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க துணைத் தூதர் வாழ்த்து தெரிவித்தார்.

                'உலகம் சுற்றும் குழு'வின் மேலாண் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் ஏற்பாட்டின் பேரில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 100 பேர், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஓரலாண்டோ சர்வதேச ஸ்டுடியோவிற்கு 10 நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவ, மாணவியர் ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களாகவும், சுற்றுலாவிற்கு ஆகும் செலவு முழுவதையும் செலுத்தக் கூடியவர்களாகவும், விமான பயணத்திற்கு ஏற்ற உடல் நலத்துடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற தகுதி மட்டும் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. நாசா சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருடன் செல்ல அவர்களது பெற்றோருக்கு அனுமதியில்லை. ஆனால், அவர்களின் பாதுகாப்பிற்கு குறிப்பிட்ட அளவில் ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர். சுற்றுலா இன்று(27ம் தேதி) துவங்கி வரும் 6ம் தேதியுடன் முடிகிறது.

                  இந்த சுற்றுலா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் கல்வி இயக்க, விண்வெளி குழந்தைகள் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதன் முறையாக, தென்னிந்தியாவைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு சுற்றுலாவில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாசா செல்லும் மாணவ, மாணவியருக்கு 'ரொபாடிக் சயின்ஸ், ஸ்பேஸ் ஷட்டில் டிசைனிங், தி ஹால் ஆப் பேம்' ஆகியவை குறித்து கற்பிக்கப்படும். அத்துடன் விஞ்ஞானிகளுடன் அளவளாவுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். நாசா சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளை சென்னையில் நேற்று நடந்த விழாவில், அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், முதன்மை வர்த்தக அலுவலர் எய்லீன்நன்டி ஆகியோர் வாழ்த்தினர். அப்போது பேசிய ஆண்ட்ரூ டி சிம்கின், 'தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியரை ஒரு முறை கண்டு விட்டால், இனி ஆண்டு தோறும் சுற்றுலாவிற்கு அழைத்து வர நாசாவில் விருப்பம் தெரிவிப்பர். அந்தளவிற்கு நமது மாணவர்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள்' என்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior