உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலைப்பணி திடீர் நிறுத்தம்


சிதம்பரம் : 

                  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, சிதம்பரம் மற்றும் சீர்காழி இடையிலான 25 கி.மீ., புறவழிச் சாலை பணி ஒப்பந்த காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

                         கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம் புறவழிச் சாலை 17 கி. மீ., தூரம் அமைக்க, 61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நாகை மாவட்டத்திற்குட் பட்ட எறுக்கூரில் இருந்து செங்கமேடு வரை, எட்டு கி.மீ., தூரம் புறவழிச் சாலைக்கு 49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலை பணிகள் கடந்த 2004ம் ஆண்டு துவங் கியது. ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டு பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. பி.முட்லூர் - கீழமூங்கிலடி வழியாக, சீர்காழி சாலையில் கடவாச்சேரி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பு.முட்லூர் - வண்டிகேட், வண்டிகேட் - கடவாச்சேரி என இரு பிரிவாக வேலை நடந்து வருகிறது. ஓரியண்டல் நிறுவனம் மற்றும் ஆப்கோ என்ற நிறுவனத்திடம் சப் கான்ட்ராக்ட் கொடுத்துள்ளது. புறவழிச்சாலையில் இடைப்பட்ட, 17 கிராமங்களில் தனியார் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டது, ஆக்கிரமிப்புகள் அகற்றியது போன்ற காரணங்க ளால், பணி துவங்குவதற்கே இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.

                           ஒரு வழியாக புறவழிச் சாலை பணி துவங்கிய நிலையில், பு.முட்லூர் - சி. முட்லூர் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே, 10 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி சவாலாக இருந்தது. இருந்தும் பணி விரைந்து முடிந்து தற் போது போக்குவரத்துக்கு தயாராகியுள்ளது. நான்கு பெரிய பாலங்கள், 53 சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளாற்று பாலத்தையொட்டி, இணைப்பு சாலை அமைக்கும் பணி முடியாததால் புறவழிச் சாலை திறக்கப்படாமல் உள்ளது. இதே போல், சிதம்பரம் அருகே நாகை மாவட்டத்திற்குட்பட்ட அரசூர் - செங்கமேடு வரையிலான, எட்டு கி.மீ., புறவழிச் சாலை பணி கடந்த 2006ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். பனமங்கலம் உப்பனாற்றில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி பில்லர் போட்ட நிலையிலேயே உள்ளது.

                         இப்பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ள ஓரியண்டல் நிறுவனத்திற்கும் சாலை மேம்பாட்டு கழகம் சார்பில், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ள 'லாசா கன்சல் டன்ட்' நிறுவனத்திற்கும் ஈகோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக, கடந்த ஒருவாரமாக பணிகள் முற்றிலுமாக நிறுத்தப் பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்ட போது,' சில விஷயங்களை வெளிப் படையாக கூற முடியாது' என கான்ட்ராக்டர்கள் கூறிவிட்டனர். பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் புறவழிச்சாலை திறப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும்: 

                    சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலை முடிக்கப்பட் டால், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மக்களும் அதிக அளவில் பயன்பெறுவர். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால் கடலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இம்மாவட்டங்களுக்குச் செல்ல சிதம்பரம் - சீர்காழி புறவழிச்சாலை பணி விரைவாக முடிக்கப்பட்டால், பயண நேரம் 60 நிமிடங்கள் குறையும். இதன் மூலம் கடைகோடியில் உள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொழில் வளம் பெருகி, மக்களின் வாழ்க்கை தரம் உயரும். சிதம்பரம் புறவழிச்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ள விஷயத்தில், முதல்வர் கருணாநிதி தலையிட்டு, புறவழிச்சாலை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior