உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது:​ பாமக

 நெய்வேலி:

               ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவதால் போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிறது என்றார் நெய்வேலி பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள். தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சில முரண்பாடான நிலை தொடர்வதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.​ இதனால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாமக தொழிற்சங்கத் தலைவர் கூறியது:​ 

                  நிர்வாகம் தொடர்ந்து காலம் தாழ்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ மேலும் அலவன்ஸ் விஷயத்திலும் பிடிவாதமாக இருந்து வருகிறது.​ இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறியும்,​​ அதனை ஏற்க மறுக்கிறது.​ எனவே தொழிற்சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகளுடனும்,​​ தொமுசவுடன் கலந்தாலோசித்து போராட்ட நடவடிக்கையில் இறங்க தீர்மானித்துள்ளோம் என்றார் பெருமாள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior