சேத்தியாத்தோப்பு :
காண்டசமுத்திரம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் கொண்டசமுத்திரம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) கற்பகம் முன்னிலை வகித்தார். ரிசோர்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவன தலைவர் வேளாங் கன்னி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ரேகா, கிருஷ்ணா, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜான்சன் ஆரோக்கியசாமி, கபாலி, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜாக்குலின் நன்றி கூறினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக