கடலூர்:
கடலூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனக் கருவிகளை, கடலூர் கெம்ப்ளாஸ்ட் பி.வி.சி. நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது. சமுதாயப் பணியின் ஓர் அங்கமாக, தலா 2 டன் திறன்கொண்ட 3 குளிர்சாதனப் பெட்டிகளை, கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது. அவற்றை கெம்ப்ளாஸ்ட் நிறுவன கடலூர் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி (இயக்கம்) என்.எஸ்.மோகன் வழங்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார். கடலூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்த குளிர்சாதனக் கருவிகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தாரஜன், கண்காணிப்பாளர் டாக்டர் பரஞ்சோதி, கெம்ப்ளாஸ்ட் நிறுவன பொது மேலாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சங்கர், மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக