சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பிரசாதக் கடைகள் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் போயின. சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்திய பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பிரகாரத்தில் பிரசாதக் கடைகள் வைக்க ஏலம் விடப்பட்டன. அப்போது ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம் போனது. கடை நடத்தும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைவதால் கடந்த ஜூன் 21-ம் தேதி ஏலம் விடப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக ரூ.10.50 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டதால் ஏலம் ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன், செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் கேட்ட புவனகிரி வடக்குதிட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக