உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

என்.எல்.சி. ஸ்டிரைக்: தீவிர பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள்

நெய்வேலி:

                என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 30) இரவுப்பணி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகமும் ஸ்டிரைக்கை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

               01-01-2007 முதல் என்எல்சி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த 6 மாதமாக நெய்வேலி மற்றும் சென்னையில் மாறிமாறி பல சுற்று பேச்சு நடத்தினர்.இப்பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அலவன்சு மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன் தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டி வருவதால், நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே முட்டுக்கட்டை நிலவி வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மே 30-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதையடுத்து நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11 மற்றும் 15-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொ.மு.ச. அறிவிப்பு:

              இதனிடையே தொமுச நிர்வாகக் குழு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தொமுச பேரவைக்கு தொமுச நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்திருப்பதால் தொமுச போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும், 30-ம் தேதி இரவுப் பணிமுதல் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாகவும் அச்சங்கத்தின் செயலர் ஆர்.கோபாலன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அறிவிப்புச் செய்திருந்த நிலையிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்துக்கு அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களிடமும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். 

                இதனிடையே செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது அலவன்ஸ் நிலுவைத் தொகை வழங்குவதில் கூடுதலாக மேலும் இரு மாதங்கள் சேர்த்து வழங்குவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்கிரிமென்ட் விஷயத்தைப் பொறுத்தமட்டில் 2007-ம் ஆண்டு முதலும், சிறப்பு இன்கிரிமென்ட் 2009-ம் ஆண்டு முதலும், 15 மாத அலவன்ஸ நிலுவைத் தொகையாக வழங்கினால் மட்டுமே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தொமுச செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைப்பிடிக்குமானால் புதன்கிழமை இரவுப்பணி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக் தொடங்கும் என்றார் அவர்.

பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார்:
         என்எல்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவிருப்பதாக நெய்வேலி டிஎஸ்பி மணி தெரிவித்தார். அதன்படி ஒரு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பி, 55 இன்ஸ்பெக்டர்கள், 252 எஸ்ஐக்கள், 1066 காவலர்கள், 358 சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

மனக் குமுறலில் போலீ ர்
 
              கோவையில் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôருக்கு, 3 நாள் சிறப்பு விடுப்பு அளித்திருந்தது காவல்துறை. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீஸôரும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மாநாடு முடிந்து 3 நாள் கிடைத்த சிறப்பு விடுப்பை ஜாலியாக அனுபவிக்கலாம் என வீடு திரும்பியபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து போலீஸாரும், நெய்வேலி பந்தோபஸ்து பணிக்குச் செல்லவேண்டும் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து. இரு மாவட்ட போலீஸôரும் மிகுந்த மன வருத்தமடைந்துள்ளனர்.எங்களுக்கு எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற விடுப்பு கிடைக்கும். ஆனால் தற்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கின்றனர் போலீஸார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior