பண்ருட்டி:
காடாம்புலியூர் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் கலெக்டரின் உத்தரவின் பேரில் வடலூர் சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. கடலூரைச் சேர்ந்த சன் பிளவர் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வந்த இந்த பள்ளியில் 50 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 10 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியை நிர்வகித்து வந்த ஒருங்கிணைப் பாளர் தனசு பல்வேறு முறைகேடு செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தை வடலூர் சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்கத் தின் தலைவரான கலெக் டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கடந்த 25ம் தேதி அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட அலுவலர் மணவாளராமானுஜம் பள்ளிக்குச் சென்ற போது எவ்வித அனுமதியின்றி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் காடாம்புலியூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளி நிர்வாகத்தை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கசாமி பொறுப் பேற்றார்.
பின்னர் அந்தப் பள்ளி நேற்று வடலூர் சுத்த சன் மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், சந்திரசேகரன், நாராயணசாமி ஆகியோர் அலுவலகத்தில் பொருட்களை கணக்கெடுத்தனர். பள்ளி நிர்வாகத்தில் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக