கிள்ளை:
சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவார அடைப்பால் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதமானது. சிதம்பரம் அருகே முடசல்ஓடை பகுதி முகத்துவாரம் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கக் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று கடலில் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு கடலுக்கும் ஆற்றுக்கும் உள்ள முகத்துவாரத்தில் கரை தட்டி நின்றது. இதனால் மற்ற படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றது. பின்னர் அனைவரும் கடலுக்குள் செல்ல முடியாமல் தங்கள் பகுதிக்கு திரும்பி வந்தனர். இதில் முதலில் சென்று கரை தட்டிய முடசல் ஓடையைச் சேர்ந்த ராஜசேகர் (55) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உடைந்து சேதமடைந்தது. இப்பகுதியில் மீனவர்கள் பாதிக்காமல் இருக்க விரைவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக