புவனகிரி:
புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.புவனகிரி தில்லை நகர் 10 ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்நகரில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நரின் தென் பகுதி பூங்கா இடத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூலம் வரும் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக