உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

படுமோசமான நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம்

சிதம்பரம்: 

              சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் சிதம்பரம் பஸ் நிலையம் குண்டும், குழியுமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

                 புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு  ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். பல்லாயிரக் கணக்கில் பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அந்த தரத் திற்கேற்ப எந்த அடிப்படை வசதியோ, சுகாதார வசதியோ இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத நிலையில் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் ஓடுவதால் ஈ. கொசுத் தொல்லை.  பயணிகளை அச்சுறுத்தும் பழைய கட்டடங்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் பயணிகள் முகம் சுளித்தும், மூக்கை பிடித்துக் கொண்டும் செல்ல வேண்டிய நிலை. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாகவும் மாறி விடுகிறது. பஸ் நிலையத்தில் உயர் கோபுர விளக்கு போடப்பட்டது. ஆனால் முழுமையாக எரியாமல் ஒப்புக்கென கண் சிமிட்டுகிறதே தவிர வெளிச்சம் தரவில்லை.

                 முக்கியமாக பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதி மற்றும் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கம் செல்லும் பஸ்கள் செல்லும் பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்தும் குண்டும், குழியுமாக சாலை மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்து விட்டால் குளமாக மாறி விடுகிறது. இதனால் பஸ் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் 90 லட்சம் ரூபாய் செலவில் பஸ் நிலையத்தில் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுமையாக பஸ் நிலையம் புதுப்பிக்கப்படாத நிலையே உள்ளது. சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்கள் சிறப்பாக இருக்கும் நிலையில் சுற்றுலா தலமாக சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் இப்படியா என பொதுமக்கள் முகம் சுளிக்கின்ற நிலைதான் உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior