உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள்

          

             ""தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்படும்,'' என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

                   மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்பட்டு வந்தது. இதை ரயில்வே துறை முன்பதிவு பெட்டிகளாக மாற்றியமைத்தது. இம்மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் இடர்பாடுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இப்பெட்டிகளை முன்போலவே முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மே மாதம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், 

                     "அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும். "இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி) பெட்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு படுக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும்' என கூறியுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior