சிதம்பரம், டிச. 13:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இம்மாதம் 23-ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் நடைபெறுகிறது.
திருவிழா விபரம் வருமாறு:
டிசம்பர் 23-ம் தேதி கொடியேற்றம், இரவு தங்கம், வெள்ளி மஞ்சங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா, 24-ம் தேதி வெள்ளி சந்திரபிறை வாகன வீதி உலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 26-ம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா. 30-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகனத்தில் வீதி உலா, 31-ம் தேதி தேர்த் திருவிழா, ஜனவரி 1-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம், புஷ்பாஞ்சலி, திருவாரண அலங்கார காட்சியும் பின்னர் பிற்பகல் ஆருத்ரா தரிசனமும், சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 2-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா முடிவடைகிறது. திருவிழா நாள்களில் தினமும் மாலை வேளையில் மாணிக்கவாசகருக்கு திருவெம்பாவை தீபாராதனை நடைபெறும் என ந.சோமசூடதீட்சிதர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக