உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

கடல் சீற்றம் மீன்பிடித்தொழில் கடும் பாதிப்பு ரூ.5 கோடி வர்த்தகம் இழப்பு

கடலூர்:

               கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது

    .                      வார்ட்  புயல் குறித்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

                      கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயர் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவளத்துறை அலுவலகம் மீனவர்களை கடலுக்கு செல்லவேண் டாம் என்று எச்சரித்தது.கடலூர் மாவட்ட கடல்பகுதி கடந்த சில தினங்களாகவே கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

                           எச்சரிக்கையையும் மீறி நேற்று முன் தினம் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் கடல்சீற்றத்தில் சிக்கி மயிரிழையில் உயிர்பிழைத்து கரை சேர்ந்தார்கள். இந்நிலையில் நேற்று கடல் ஆவேசமாக காட்சி அளித்தது. கடலில் 10 அடி உயரத்திற்கு ராட்சத் அலைகள் எழும்பி பலத்த சத்தத்தோடு கரையில் மோதின. கடலில் காணப்படும் அசாதரண நிலை மீனவர் கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. நேற்று 3 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் வலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு பழுதுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

                    கடந்த 10 நாட்காளாக மீன்படித்தொழில் சரிவர நடக்காததால் கடலூர் துறைமுகத்தில் ரூ 5 கோடி அளவிற்கு மீன் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீன் விற்பனை இல்லாததால் ஞாயிற்று கிழமையான நேற்று இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior