கடலூர்:
புயல் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் கூட்டம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் வட்டார வளர்ச் சித் துறை அலுவலர்களும் கடலூர் வட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர். புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக