கடலூர், டிச. 12:
கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர். கடலூர் திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலைப் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். கடலூரில் அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும். திருவந்திபுரத்தைச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். பெண்ணை ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்ட வேணடும்.
மா ணவர் நலன் கருதி, காலை, மாலை வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். நகரில் ஒருங்கிணைந்த வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.
கடலூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு. மருதவாணன், நிர்வாகிகள் இப்ராஹிம், ராஜா, இணைப் பொதுச் செயலர் பி. வெங்கடேசன், பொதுநல இயக்கங்களைச் சேர்ந்த வெண்புறா குமார், வழக்கறிஞர் திருமார்பன் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக