பண்ருட்டி,டிச.12:
மேல்குமாரமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு தொழிலை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் சாலை மறியல் மற்றும் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அண்ணாகிராம ஒன்றிய துணைத் தலைவர் எம்.சி.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
பண்ருட்டி வட்டம் மேல்குமாரமங்கலம் கிராமம் அருகே தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் அரசு அதிகாரிகளின் துணையோடு திருட்டு மணல் தொழில் படு ஜோராக நடைபெறுகிறது.÷கூட்டாக செயல்படும் மணல் திருட்டுக் கும்பலால் ஒரு நாள் இரவில் மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட லோடு (லாரி) மணல் கடத்தப்படுகிறது. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.÷இ ரவில் மணல் கடத்தப்படும் லாரிகளை வேகமாக ஓட்டுவதால் எழும் இரைச்சல் காரணமாக கிராம மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மேலும் மது அருந்தி வாகனங்களை ஓட்டுவதால் வெளியில் தூங்கும் மக்களுக்கோ, கட்டப்பட்டுள்ள கால்நடைகளுக்கோ பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மேல்குமாரமங்கலம் கிராம மக்கள் முதலமைச்சர் தனிப் பிரிவு,மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என பலருக்கு புகார் மனு அனுப்பியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இ தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி மணல் லாரிகள் ஆற்றுக்கு செல்லும் வழியில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளம் பறித்தனர். இத னால் ஆத்திரம் அடைந்த மணல் கடத்தல் கும்பல் இரவு நேரத்தில் அடியாட்களுடன் ஊருக்குள் புகுந்து அராஜகம் செய்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரை வீணாக்கி தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இச் சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில், மேல்குமாரமங்கலம் கிராம மக்கள் திரண்டு சென்று புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, போலீஸôரும் அவர்களுக்கு துணை போவது போல் நடந்துக் கொள்கின்றனர். இந்த மணல் கடத்தல் தொழில் உள்ளூர் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மணல் கடத்தலை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும்.
தொடர்ந்து இந்நிலை நீடிக்குமேயானால், உரிய நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து சாலை மறியல் மற்றும் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அண்ணா கிராம ஒன்றிய துணைத் தலைவர் எம்.சி.சம்பந்தம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக