கடலூர், டிச. 13:
நரிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த வெடி வெடித்ததில், மாணவர் மணிகண்டன் (12) பலத்தக் காயம் அடைந்தார். க டலூர் அருகே குள்ளஞ்சாவடியை அடுத்த மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன். வெங்கடாம்பேட்டையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். மணிகண்டன் சனிக்கிழமை வயல்வெளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.
ஒரு இடத்தில் கால் வைத்தபோது பயங்கர சப்தத்துடன் வெடி வெடித்தது. இதில் மணிகண்டன் பலத்தக் காயம் அடைந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார்.
மதனகோபாலபுரம் பகுதியில் அதிக அளவில் மணிலா பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் மணிலாப் பயிர்கள் உள்ளன. ஆனால் இரவு நேரங்களில் நரிகள் கூட்டம் கூட்டமாக வந்து மணிலா பயிரை சேதப்படுத்தி வருகின்றன. எனவே நரிகளை விரட்டுவதற்காக விவசாயிகள் நிலத்தில் வெடிகளைப் புதைக்கு வைத்து இருந்ததாகத் தெரிகிறது.
அவ்வாறு புதைக்கப்பட்ட வெடி வெடித்ததால் மணிகண்டன் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக