சிதம்பரம், டிச. 13:
சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் ஹோட்டல் மானஸரோவரில் தசாவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின் தலைமை வகித்தார். செயலாளர் கே.விஜயகுமார் தாலேடா வரவேற்றார். மாவட்ட துணை ஆளுநர் பி.குப்புசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பின்னர் சாசன இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பி.ராஜேஸ்வரி சாசன உறுப்பினர்களை கெüரவித்து வாழ்த்து தெரிவித்தார். 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாசனத் தலைவர் பழனிவேல் கேக் வெட்டி அனைவருக்கு வழங்கினார். புதிய உறுப்பினர்களை மாவட்டத் தலைவர் கே.கணேசன் சங்கத்தில் இணைத்து வைத்தார். நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 4 பேருக்கு மாவட்டத் தலைவர் ஆர்.தண்டபாணி புத்தாடைகள் வழங்கினார்.
சுயவேலை வாய்ப்பு தினத்தை முன்னிட்டு 6 ஏழை மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கே.ஆர்.கண்ணன் உடல்தானம் செய்ய முன்வந்து உறுதிமொழிப் பத்திரத்தை விழாவில் வழங்கினார். மேலும் சங்க முன்னாள் தலைவர் தினம், என்சிசி அதிகாரி நடராஜனுக்கு பாராட்டு விழா, நிறுவனர் நாள் விழா உள்ளிட்ட 9 நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மூத்த நிர்வாகிகள் கே.கணபதி, ஆர்.எம்.சுவேதகுமார், கே.சேதுமாதவன், மண்டலத் தலைவர் ஜி.துரைசாமி, வட்டாரத் தலைவர் எம்.லலித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ஏ.ஆர்.மனோகரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக