கடலூர், டிச. 13:
தற்போது பெய்துவரும் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடப்பட்டு உள்ளது. நாற்று நட்டு 45 முதல் 60 நாள் பயிராக தற்போது உள்ளது. 10 தினங்களுக்கு முன் சம்பா நெல் பயிரில் சில பகுதிகளில் பூச்சித் தாக்குதல் காணப்பட்டது. தற்போது பெய்துவரும் மழையால் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொள்ளிடம் கீழணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் விடுவது 2 நாள்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்டா பாசனப் பகுதி வாய்க்கால்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.மழை குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், டெல்டா சம்பா நெற்பயிருக்கு தற்போது பெய்துவரும் மழை மிகவும் சாதகமாக உள்ளது. 10 தினங்களுக்கு முன் ஆங்காங்கே மஞ்சள்நோய், இலைக்கருகல் நோய்த் தாக்குதல் காணப்பட்டது. தற்போது பெய்துவரும் மழையால் நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்கள் மீட்கப்பட்டு உள்ளன. மழை பெய்திராவிட்டால் விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காக ஏக்கருக்கு ரூ.500 வரை செலவு செய்ய நேரிட்டு இருக்கும் என்றார்.மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லைக டல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. "வார்டு' புயல் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மையம் கொண்டு இருப்பதால், கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 3 நாள்களாக மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டே இருந்தது. கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் 10 அடி உயரத்துக்கு மேல் எழுந்து ஆர்ப்பரித்த வண்ணம் உள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை 3-வது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். மீன்பிடிக் காலங்களில் மிகவும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகத்தின் மீன் இறங்குதளம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் கிடந்தது. மீன் அங்காடிகளுக்கு மீன் வரத்து வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.பொ துவாக கடலூர் நகர மீன் அங்காடிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். மீன்கள் வரத்துக் குறைவால் விலையும் அதிகரித்து இருந்தது. மக்கள் கூட்டமும இல்லை. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் மீன் வலைகளைப் பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டு இருந்ததனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக