கடலூர், டிச. 13:
வங்கக் கடலில் நீடித்து வரும் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடலூர் துறைமுகத்துக்கு வர வேண்டிய ஜப்பானியக் கப்பல் வெகு தொலைவில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. கடலூர் பி.வி.சி. தொழிற்சாலைக்கு வினைல் மோனமார் என்ற திரவ மூலப்பொருள் அவ்வப்போது சரக்குக் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. தற்போது 7 ஆயிரம் டன் வினைல்மோனமாருடன் கேஸ்கெம் என்ற கப்பல் ஜப்பான் நாட்டில் இருந்து புறப்பட்டு வந்தது. ஆனால், கடல் கொந்தளிப்பு காரணமாக அந்தக் கப்பல் கடந்த 3 நாள்களாக கடலூர் துறைமுகத்தை வந்தடைய முடியவில்லை. எனவே 20 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் கடலில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக