நெய்வேலி, டிச. 13:
நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் கோயில் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய விருந்தினர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெய் வேலியின் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டுóம் பங்குனி உத்திரத்தின் போது மிகப்பெரிய திருவிழா நடைபெறும். அந்தச் சமயத்தில் வெளியூரில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் கோயிலுக்கு வந்துசெல்வர்.
இவ்வாறு வந்துசெல்லும் பக்தர்களின் வசதிக்காக நெய்வேலிக் குழுக் கோயில் நிர்வாகம் வேலுடையான்பட்டு கோயில் அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் விருந்தினர் இல்லம் கட்ட முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, இயக்குநர்கள் ஆர்.கந்தசாமி, சேகர், நெய்வேலி குழுக் கோயில்கள் அறங்காவலர் சிவஞானம், என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொதுமேலாளர் சி.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக